ஆர்.கே.நகர் தொகுதியில் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வினர் பதுக்கிய பரிசு பொருட்கள் பறிமுதல்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. வாக்காளர்களுக்கு கட்சியினர் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அ.தி.மு.க. சார்பில் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் குடோனில் பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி முகமது அஸ்லாமிடம் தி.மு.க.வினர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த திருமண மண்டபத்தில் அதிரடியாக சோதனை செய்தனர். அதில் அங்கு பதுக்கி வைத்து இருந்த 5 கிலோ எடை கொண்ட 180 அரிசி பைகள் மற்றும் இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பேனர்கள் அகற்றாமல் உள்ளதாகவும் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story