வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்


வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 2 March 2021 4:46 PM GMT (Updated: 2 March 2021 4:46 PM GMT)

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 

இதுதவிர 5 மாவட்டத்தின் குடிநீர் தேவை, உசிலம்பட்டி பகுதி மக்களின் தேவைக்காக 58-ம் கால்வாயிலும், ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம், சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. தற்போது வைகை அணை நீர் மட்டம் 63.96 அடியாக உள்ளது. அணையில் உள்ள தண்ணீரை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 6 மாதத்தில் மட்டும் வைகை அணையில் இருந்து மொத்தமாக சுமார் 15 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story