போடியில் அதிமுகவினர் சாலை மறியல்


போடியில் அதிமுகவினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 March 2021 10:53 PM IST (Updated: 2 March 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

போடியில் திமுக பேனர்களை அகற்றக்கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போடி:

போடி பெருமாள் கோவில் அருகே தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்புறம் கட்சி விளம்பர பேனர்கள் மற்றும் கொடி கம்பம் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த விளம்பர பேனர்கள், கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி போடி அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள் நேற்று போடி மேலராஜ வீதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த போடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அ.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்துசென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story