100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்திஇருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூர்
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மகளிர் திட்டம் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அண்ணாசாலையில் உள்ள ஏலகிரி அரங்கில் முடிவடைந்தது.
இதில், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டு வாக்குப்பதிவின் அவசியம் குறித்த பதாகைகள் ஏந்தி சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக 'நேர்மையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் உறுதிமொழி' என்ற தலைப்பில் கலெக்டர் சண்முகசுந்தரம் உறுதிமொழி வாசிக்க பெண்கள் ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தையும் கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்குமரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் விஜயராகவன் (பொது), கணேசன் (தேர்தல்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story