கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா


கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
x
தினத்தந்தி 2 March 2021 7:45 PM GMT (Updated: 2 March 2021 7:45 PM GMT)

கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி கணக்க விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராசேந்திரசோழன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Next Story