மத்திய ஆயுத காவல் படையினர் கொடி அணிவகுப்பு


மத்திய ஆயுத காவல் படையினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 3 March 2021 1:18 AM IST (Updated: 3 March 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் மத்திய ஆயுத காவல் படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த 90 வீரர்கள், அரியலூருக்கு வந்துள்ளனர். தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு அளிக்கும் வகையில், அரியலூரில் மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. காமராசர் திடலில் இருந்து அணிவகுப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதையடுத்து உதவி கமிஷனர் பக்ரீத் லாலா தலைமையில் கொடி அணிவகுப்பு சத்திரம், எம்.பி. கோவில் தெரு, தேரடி, மார்க்கெட் தெரு வழியாக போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.

Next Story