துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
பெரம்பலூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்திற்கு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 92 பேர் கொண்ட துணை ராணுவப்படையினர் வருகை தந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீவெங்கடபிரியா அறிவுரையின்பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் மேற்பார்வையில் மத்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் பெரம்பலூர் உட்கோட்ட போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.
பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், நீதிராஜ், பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ் (பெரம்பலூர்), செந்தில்குமார் (அரும்பாவூர்) மற்றும் பெரம்பலூர் உட்கோட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் ஏட்டுகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். கலவர தடுப்பு போலீஸ் வாகனங்களும் அணிவகுத்து சென்றன.
Related Tags :
Next Story