மது விற்ற பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு
மது விற்ற பெண் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மது விற்றதாக தா.பழூர் அருகே உள்ள கோடாலிக்கருப்பூரை அடுத்த வக்காரமாரி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(வயது 32), சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த அன்பரசன்(55), தா.பழூர் சுத்தமல்லி சாலையை சேர்ந்த சரஸ்வதி(48), உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன்(56) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story