முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூர் மாவட்டத்தில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக சுகாதாரத்துறையின் மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட மற்றும் இணை நோய்களுடன் கூடிய 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இந்த பணியை பார்வையிட்ட கலெக்டர் ரத்னா கூறுகையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை, கடுகூர், திருமானூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம், குமிழியம் மற்றும் தா.பழூர் உள்ளிட்ட 6 வட்டார மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொள்ளலாம். மேலும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் கோவின் என்ற செயலியின் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அல்லது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகளை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், என்றார். இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, உதவித்திட்ட மேலாளர் சதீஸ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story