ஆம்பூர் போலீஸ்நிலையத்தில் தோட்டா நிரப்பும்போது துப்பாக்கி வெடித்தது


ஆம்பூர் போலீஸ்நிலையத்தில் தோட்டா நிரப்பும்போது துப்பாக்கி வெடித்தது
x
தினத்தந்தி 3 March 2021 2:46 AM IST (Updated: 3 March 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் போலீஸ்நிலையத்தில் தோட்டாக்களை நிரப்பி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென வெடித்தது.

ஆம்பூர்,

ஆம்பூரை அடுத்த மாதனூர் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை, துணை ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இதில் பங்கேற்க ஆம்பூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி போலீஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்து சென்று அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அணிவகுப்பு முடிந்தவுடன் போலீஸ் நிலையத்தில் இருந்த எழுத்தர் சேது என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். 

எழுத்தர் சேது துப்பாக்கியை துடைத்து தோட்டாக்களை நிரப்பி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென வெடித்தது. மேலும் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு அங்கிருந்த சுவற்றில் பட்டதால். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story