ராணிப்பேட்டையில் துணை ராணுவப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு


ராணிப்பேட்டையில் துணை ராணுவப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 2 March 2021 9:51 PM GMT (Updated: 2 March 2021 9:58 PM GMT)

ராணிப்பேட்டையில் துணை ராணுவப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடந்தது.

ராணிப்பேட்டை,

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலிசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் முன்னிலையில், கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

ஊர்வலம் ராணிப்பேட்டை ெரயில்வே ஸ்டேஷன் ரோடு, முத்துக்கடை, எம்.எப்.ரோடு, புதிய பஸ் நிலையம், பஜார் வீதி, கிருஷ்ணகிரி சாலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது.
இந்த கொடி அணிவகுப்பில் ராணிப்பேட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன் உள்ளிட்ட சுமார் 200-க்கும் அதிகமான துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Next Story