சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 March 2021 10:24 PM GMT (Updated: 2 March 2021 10:24 PM GMT)

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
சேலம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சின்னமணி (வயது 63). பூ வியாபாரியான இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சின்னமணி நேற்று காலை தனது மகள் மலர்கொடி (34) என்பவருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து கேனில் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து சின்னமணி மற்றும் மலர்கொடி ஆகியோரை போலீசார் சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரிடம் சின்னமணி கூறும் போது, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகன் சுரேஷ், என்னிடம் இருந்து நிலம் மற்றும் வீட்டை எழுதி வாங்கி கொண்டார். அப்போது அவர், மகள் மலர்கொடிக்கு ரூ.10 லட்சம் வரை கொடுப்பதாக கூறினார்.
ஆனால் இதுவரை மகளுக்கு பணம் கொடுக்கவில்லை. மேலும் மற்ற 2 மகன்களுக்கும் சொத்துகளை பிரித்து கொடுப்பதில் அவர் இடையூறாக உள்ளார். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மனவேதனை அடைந்த நான், மகளுடன், தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story