தர்மபுரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
தர்மபுரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள சவுளுபட்டி பகுதியை சேர்ந்தவர் சகாயமேரி (வயது 46). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு பென்னாகரத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் மீண்டும் சவுளுபட்டியில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சகாயமேரி வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் பொருட்கள் திருட்டு போய் இருந்தன.
இதுதொடர்பாக அவர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story