கடந்த 2 மாதங்களில் 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்


கடந்த 2 மாதங்களில் 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 2 March 2021 11:00 PM GMT (Updated: 2 March 2021 11:03 PM GMT)

கடந்த 2 மாதங்களில் 51 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.

திருவண்ணாமலை,

பெண் 18 வயதும், ஆண் 21 வயதும் நிறைவடையாத நிலையில் செய்யப்படும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமண தடைச்சட்டத்தின்படி மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தியடையாமல் உள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

கடந்த 2020-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 238 குழந்தை திருமணங்கள் சைல்டுைலன் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் தொடர்ந்து அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

தடுத்து நிறுத்தம்

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 51 குழந்தை திருமணங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பல குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, குழந்தை திருமணங்களை தடுக்க கிராமம் வாரியாக குழந்தை திருமணம் தடுப்பு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர். 
இருப்பினும் குழந்தை திருமணம் நடைபெறுவது குறையவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story