மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Family dispute Army soldier commits suicide by hanging

குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறு ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை.
வாலாஜாபாத், 

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மையன் பேட்டை ஊராட்சி வன்னியர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா என்ற மனைவியும் ஜெகத்ரட்சகன், சோம்நாத் என்ற மகன்களும் உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விடுப்பில் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் நதியா 4 நாட்களுக்கு முன்னர் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த ராணுவவீரர் செந்தில்குமார் குடிபோதையில் நேற்று வீட்டு வரண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணுவ வீரர் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு; 8 பேர் சாவு; கொலையாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம் உள்ளது.
2. நீடாமங்கலம் அருகே ெரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
நீடாமங்கலம் அருகே ெரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
3. முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை
முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை.
4. திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்: பெங்களூரு காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை சென்னையில் பிணமாக கிடந்தனர்
திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பெங்களூரு காதல் ஜோடி ஒன்று சென்னையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
5. திருமணம் ஆன 43 நாட்களில் பயங்கரம் புதுப்பெண்ணை கொன்று கணவர் தற்கொலை
சேலம் அருகே திருமணம் ஆன 43 நாட்களில் புதுப்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை