ஏரலில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரசாரம்


ஏரலில்  தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 3 March 2021 8:23 PM IST (Updated: 3 March 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

ஏரலில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடந்தது.

ஏரல்:

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஏரல் தாலுகா பகுதிகளில் 100 சதவீத வாக்கு அளிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் வாகன பிரசாரம் தொடக்க விழா நடந்தது. 

ஏரலில் நடந்த நிகழ்ச்சிக்கு தேர்தல் ஏரல் துணை தாசில்தார் தங்கையா தலைமை தாங்கி, வாகனம் மூலம் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்.இ.டி. திரையில் படங்கள் காண்பித்து தொடங்கி வைத்தார்.

இதில் ஏரல் வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரிகள் வாழவல்லான் கார்த்திக், சிறுத்தொண்டநல்லூர் கண்ணன், கிராம உதவியாளர்கள் வள்ளி, திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து பிரசார வாகனம் ஏரல் பஸ் நிலையம், காந்தி சிலை பஸ் நிறுத்தம், வாழவல்லான், முக்காணி, பழையகாயல் பகுதிகளுக்கு சென்றது.

Next Story