பேரணாம்பட்டு அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 35 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

பேரணாம்பட்டு அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 35 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2021 5:06 PM GMT (Updated: 3 March 2021 5:06 PM GMT)

பேரணாம்பட்டு அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 35 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் பத்தலபல்லி செல்லும் கூட்டு ரோட்டில் உள்ள முட்புதரில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அதிகாரி சிவசண்முகம் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்து ஆந்திர மாநிலத்துக்குக் கடத்துவதற்காக முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 1953 கிலோ எடையிலான 35 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, குடியாத்தம் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

Next Story