அனைத்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் வேட்பாளர்கள் செலவு செய்யும் பொருட்களுக்கான விலைப்பட்டியல் வெளியீடு


அனைத்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் வேட்பாளர்கள் செலவு செய்யும் பொருட்களுக்கான விலைப்பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 3 March 2021 10:57 PM IST (Updated: 3 March 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வேட்பாளர்கள் செலவு செய்யும் பொருட்களுக்கான விலைப்பட்டியலும் வெளியிடப்பட்டது.

திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வேட்பாளர்கள் செலவு செய்யும் பொருட்களுக்கான விலைப்பட்டியலும் வெளியிடப்பட்டது.
விலைப்பட்டியல் 
தமிழக சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக அடுத்தமாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் மூலம் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினந்தோறும் மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்களை கணக்கு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கும் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களுக்கும் திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் விலையின் அடிப்படையில் நிலையான விலைப்புள்ளி பட்டியல் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு நிலையான விலைப்புள்ளி பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது.
தேர்தல் செலவு கணக்கு 
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் தினந்தோறும் மேற்கொள்ளும் செலவினங்கள், நிர்ணயம் செய்யப்பட உள்ள நிலையான விலைப்புள்ளி பட்டியல் கொண்டு கணக்கீடு செய்து, அவர்களது தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். தேர்தலின் போது நியமனம் செய்யப்படும் தேர்தல் செலவின மேற்பார்வையாளரிடம் ஒப்படைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இதற்கான விலைப்பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாகுல் அமீது (பொது), ஜெயபாலன் (கணக்குகள்), தேர்தல் தாசில்தார் முருகதாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story