அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்


அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2021 5:55 PM GMT (Updated: 3 March 2021 5:55 PM GMT)

அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

சாயல்குடி,மார்ச்
டி.என்.டி பிரிவினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்பு கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்ததும் முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவேந்திரா ரவி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story