தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்


தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
x
தினத்தந்தி 3 March 2021 5:58 PM GMT (Updated: 3 March 2021 5:58 PM GMT)

தேர்தல் விதிமீறல் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

ராமநாதபுரம்,மார்ச்
சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களை கண்காணித்திட ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
அதில், தேர்தல் நன்னடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை 1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 1950 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Next Story