ஆற்காடு தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு


ஆற்காடு தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில்  கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2021 6:10 PM GMT (Updated: 3 March 2021 6:10 PM GMT)

ஆற்காடு தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

ஆற்காடு

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆற்காடு தொகுதியில் தோப்புக்கானா நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் திமிரி ஆகிய பகுதிகளில் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், உதவி கலெக்டர் இளம்பகவத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story