ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உலக வனவிலங்கு தின கருத்தரங்கம்


ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உலக வனவிலங்கு தின கருத்தரங்கம்
x
தினத்தந்தி 3 March 2021 6:14 PM GMT (Updated: 3 March 2021 6:16 PM GMT)

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உலக வனவிலங்கு தின கருத்தரங்கம் நடந்தது.

ஊட்டி,

ஊட்டி அரசு கல்லூரி விலங்கியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் துறை சார்பில், உலக வனவிலங்கு தினத்தைெயாட்டி வனவிலங்கை பாதுகாப்பதன் அவசியம் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. 

கருத்தரங்கில் உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். நீலகிரி கோட்ட உதவி வன பாதுகாவலர் சரவணன் கலந்து கொண்டு பேசும்போது, இந்தியாவிலேயே நீலகிரி மாவட்டம் முதல் உயிர்ச் சூழல் மண்டலமாக திகழ்கிறது. இதற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி உள்ளது. 

இதனால் உலக வனவிலங்கு தினத்தை நீலகிரியில் கொண்டாடுவது பொருத்தமானதாக இருக்கும். வனத்துறை மூலம் மனித-விலங்கு மோதலை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி பேசும்போது, காட்டு யானை, புலி போன்ற வனவிலங்குகளின் டி.என்.ஏ. மாதிரி சோதனை கல்லூரி ஆய்வகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். 

வனவிலங்குகளை பாதுகாப்பதில் பழங்குடியினர்களின் பங்கு முக்கியம் என்றார். இதில் துறை தலைவர் எபனேசர் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story