தேரில் விநாயகர் வீதி உலா


தேரில் விநாயகர் வீதி உலா
x
தினத்தந்தி 3 March 2021 7:13 PM GMT (Updated: 3 March 2021 7:13 PM GMT)

தேரில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது.

ஆலங்குடி,மார்ச்.4-
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் விநாயகர்கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு யாகசாலைபூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் விநாயகரை சிறிய தேரில் எழுந்தருள செய்து வீதி உலா நடைபெற்றது. தேர் கல்லாலங்குடி ஆர்ச், ஸ்டாலின் நகர், திருப்பதி நகர், மேட்டுப்பட்டி, நடேசன் நகர் ஆகிய பகுதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. ஆங்காங்கே பொதுமக்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 5 மணிக்கு புறப்பட்ட தேர் இரவு 9 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. பின்னர் உற்சவரை கோவிலுக்குள் கொண்டு சென்று வைக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர்.

Next Story