லாலாபேட்டை கிளை நூலகம் முழு நேர செயல்பாட்டுக்கு வந்தது


லாலாபேட்டை கிளை நூலகம் முழு நேர செயல்பாட்டுக்கு வந்தது
x
தினத்தந்தி 3 March 2021 7:15 PM GMT (Updated: 3 March 2021 7:15 PM GMT)

லாலாபேட்டை கிளை நூலகம் முழு நேர செயல்பாட்டுக்கு வந்தது.

லாலாபேட்டை
கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் கிளை நூலகம் உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 6 மாதமாக நூலகம் மூடப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததால், கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் நூலகம் மீண்டும் திறக்கப்பட்டு காலை முதல் மதியம் வரை செயல்பட்டு வந்தது. தற்போது முழு நேரம் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது முதல் கிளை நூலகம் முழு நேரம் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வந்து முககவசம் மற்றும் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து நூலகம் மற்றும் தமிழ், ஆங்கில நாளிதழ்களை படித்து விட்டு செல்கின்றனர். மேற்கண்ட தகவலை கிளை நூலகர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story