வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டு சிறை
வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கரூர்
பணம் பறிப்பு
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு என்ற மாங்காபிரபு. இவர் மீது சேலம், கோவை, கரூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு வேலாயும்பாளையத்தில் நடந்து சென்ற ஒருவரிடம் பிரபு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கப்பதிந்து, பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து வழக்கு விசாரணை முழுவதும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சுந்தரையா அதற்கான தீர்ப்பை வழங்கினார். இதில், பிரபு வழிப்பறியில் ஈடுபட்டதற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து பிரபுவை போலீசார் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story