துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 4 March 2021 1:08 AM IST (Updated: 4 March 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

ஜெயங்கொண்டம்
சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்தவகையில் ஜெயங்கொண்டம் வந்துள்ள துணை ராணுவத்தினர் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். அண்ணா சிலையிலிருந்து புறப்பட்ட இந்த கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் ஆகியோர் தலைமையில் சென்ற இந்த கொடி அணிவகுப்பில் மத்திய ஆயுத காவல் படை உதவி ஆணையர் பக்ரீத் லாலா, போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன், அரியலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் ஈடுபட்டனர்.


Next Story