19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை


19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
x
தினத்தந்தி 4 March 2021 1:13 AM IST (Updated: 4 March 2021 1:13 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் உதவி அதிகாரி ரவிச்சந்திரன் கூறினார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் உதவி அதிகாரி ரவிச்சந்திரன் கூறினார். 
பணிகள் தீவிரம் 
சட்டமன்ற ேதர்தலை முன்னிட்டு தேர்தல் முன் ஏற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
இதையொட்டி தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் செய்து வருகின்றனர். 
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் சுவர் விளம்பரங்கள், கட்சி கொடிக்கம்பங்கள், பேனர்கள் ஆகியவை வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. 
வாக்காளர்கள் 
இதுகுறித்து  உதவி அதிகாரி ரவிச்சந்திரன் கூறியதாவது:- 
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,22,980 வாக்காளர்கள் உள்ளனர். 
இதில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியதாகும். அருப்புக்கோட்டை தொகுதியில் 252 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
பதற்றமானவை 
இதில் 19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பணிகள் மேற்கொள்வது குறித்து தேர்தல் அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story