கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2021 1:25 AM IST (Updated: 4 March 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, ஸ்ரீராமன் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகே உள்ள காலி இடத்தில் கோவில் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் அனைவரும் ஒன்று கூடி விழா கொண்டாடி வந்தனர். கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருவதாக தெரிகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் ஆண்டிமடம் தாலுகா அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் மனு அளித்தனர். மனு அளித்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்கக்கோரி நேற்று ஆண்டிமடம் தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தாசில்தார் தேர்தல் பணிக்காக வெளியில் சென்றிருந்ததால் அவர் வரும் வரை தாலுகா அலுவலகத்திலேயே காத்திருந்தனர். பின்னர் வந்த தாசில்தார் முத்துகிருஷ்ணன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story