தி.மு.க. விளம்பர பதாகைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு


தி.மு.க. விளம்பர பதாகைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 4 March 2021 1:55 AM IST (Updated: 4 March 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. விளம்பர பதாகைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

திருப்பூர்:
திருப்பூரில் தி.மு.க. விளம்பர பதாகைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளுடன் வாக்குவாதம் 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் விளம்பர பதாகைகளை மாநகராட்சி அதிகாரிகள் திருப்பூரில் அகற்றி வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் டூம்லைட் மைதானம் பகுதியில் நேற்று தி.மு.க. விளம்பர பதாகைகளை மாநகராட்சி உதவி கமிஷனர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் கோவிந்த் பிரபாகர், சுகாதார அதிகாரி பிச்சை உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
அப்போது அந்த விளம்பர பதாகைகளை வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராஜ் உள்ளிட்ட தி.மு.க.வினர் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக்கூறியும், விளம்பர பதாகைகளை அகற்ற எதிர்ப்பும் தெரிவித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
வாகனம் சிறைபிடிப்பு 
விளம்பர பதாகைகளை ஏற்றிய வாகனமும் சிறைபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தெற்கு போலீசார் வந்தனர். அவர்கள் தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தி.மு.க.வினர் விளம்பர பதாகைகளை அகற்றக்கூடாது என தொடர்ந்து தெரிவித்தனர்.
இதன் பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து போலீசில் புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story