ஒற்றைக்காலில் நின்றபடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்


ஒற்றைக்காலில் நின்றபடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2021 8:27 PM GMT (Updated: 3 March 2021 8:27 PM GMT)

ஒற்றைக்காலில் நின்றபடி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை நடப்பாண்டு முதல் செயல்படுத்தக்கோரி கல்லூரி வளாகத்தில் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 அந்த வகையில் 6-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் ஒற்றைக் காலில் நின்றபடி தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். 

Next Story