குற்றவாளிகளை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


குற்றவாளிகளை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 4 March 2021 2:11 AM IST (Updated: 4 March 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலையொட்டி குற்றவாளிகளை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தினார்.

நெல்லை, மார்ச்:
சட்டமன்ற தேர்தலையொட்டி குற்றவாளிகளை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தினார்.

தேர்தல் பாதுகாப்பு

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் அனைத்து உட்கோட்ட உதவி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவுரை வழங்கும் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசியதாவது:-
ரவுடி பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தங்கள் பகுதியில் உள்ள வெடிபொருட்கள் வைத்துள்ள குடோன்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கைது செய்ய வேண்டும்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்ய  வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருப்பவர்களை நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பெற்று அவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரதீப், அர்ச்சனா, லிசா ஸ்டெபிலா தெரஸ், பிரான்சிஸ், உதய சூரியன் மற்றும் தேர்தல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story