புதிய வாக்காளர்கள் மின்னணு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம்; 13,14-ந் தேதிகளில் நடக்கிறது


புதிய வாக்காளர்கள் மின்னணு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம்; 13,14-ந் தேதிகளில் நடக்கிறது
x
தினத்தந்தி 5 March 2021 12:25 AM IST (Updated: 5 March 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

புதிய வாக்காளர்கள் மின்னணு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் வருகிற 13,14-ந் தேதிகளில் நடக்கிறது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தபோது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில், தங்களது செல்போன் எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 13, 14-ந்தேதி ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமினை பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்போன், கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ரத்னா தெரிவித்தார்.
1 More update

Next Story