ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 4 March 2021 6:59 PM GMT (Updated: 4 March 2021 6:59 PM GMT)

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் வேளாண் பயிர்களில் பூச்சி நோய் கட்டுப்பாடு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி வாணதிரையான்பட்டிணம் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வேளாண்மை உதவி இயக்குனர் கீதா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், பயிர்களுக்கு பூச்சி நோய் ஏற்படுவதற்கு பருவநிலை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பூச்சி நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம், என்றார். கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன், உழவியல் வல்லுனர் திருமலைவாசன் ஆகியோர் பேசினர். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் சகாதேவன் வரவேற்றார். வாணதிரையான்பட்டிணத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட விவசாயி மருதகாசி செய்திருந்தார்.

Next Story