வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜெயங்கொண்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம், காந்தி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்டும் வகையிலும், கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வாக்கு அளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்கு செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை அளிக்க 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ, சிவிஜில் என்ற செயலி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம். அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின்போது நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சிவராமகிருஷ்ணன், மேலாளர் (பொறுப்பு) தன்ராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






