மாவட்ட செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே ஷேர் ஆட்டோக்கள் மோதல்; தாய்-மகள் சாவு + "||" + Share autos collide near Sunguvarchatram; Mother-daughter death

சுங்குவார்சத்திரம் அருகே ஷேர் ஆட்டோக்கள் மோதல்; தாய்-மகள் சாவு

சுங்குவார்சத்திரம் அருகே ஷேர் ஆட்டோக்கள் மோதல்; தாய்-மகள் சாவு
சுங்குவார்சத்திரம் அருகே ஷேர் ஆட்டோக்கள் மோதிய விபத்தில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர்.
ஷேர் ஆட்டோக்கள் மோதல்
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த மேட்டுகந்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி கண்ணகி (வயது 35). இவர்களுடைய மகள் ஜனனி (15). இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜனனிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது தாய், ஜனனியை அழைத்துக்கொண்டு ஷேர் ஆட்டோவில் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார்.சுங்குவார்சத்திரம்-மதுரமங்கலம் சாலையில் சோகண்டி என்னும் இடத்தில் செல்லும்போது எதிரே வந்த மற்றொரு ஷேர் ஆட்டோ மீது 
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனது.

தாய், மகள் சாவு
இதில் கண்ணகி சென்ற ஷேர் ஆட்டோ சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கண்ணகி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியனார். விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜனனி, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.