பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்


பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 7 March 2021 1:22 AM IST (Updated: 7 March 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமிையயொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வடுக பைரவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சிக்கு அஷ்டமி வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
1 More update

Next Story