பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 171 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 325 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
பஸ்களில் மக்கள் முக கவசம் அணிந்து பயணம் செய்கிறார்களா? என்பதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வேதாரண்யம் பகுதி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தடுப்பூசி இல்லை என ஊழியர்கள் கூறியதால் ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.