முகவரி மாற்றப்பட்ட வாக்காளர் அட்டையின் நகலை இ-சேவை மையங்களில் பெறலாம்


முகவரி மாற்றப்பட்ட வாக்காளர் அட்டையின் நகலை இ-சேவை மையங்களில் பெறலாம்
x
தினத்தந்தி 7 March 2021 1:24 AM IST (Updated: 7 March 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

முகவரி மாற்றப்பட்ட வாக்காளர் அட்டையின் நகலை இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்

அரியலூர்:
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து முகவரி மாற்றம் செய்யப்பட்ட இனங்களுக்கு நகல் வாக்காளர் அடையாள அட்டைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் இயங்கி வரும் இ-சேவை மையங்களில் ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், அரியலூர், ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலக வளாகம், ஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. எனவே மேற்காணும் இ-சேவை மையங்களில் முகவரி மாற்றம் செய்யப்பட்ட இனங்களுக்கு ரூ.25 கட்டணம் செலுத்தி நகல் வாக்காளர் அடையாள அட்டைகளை பொதுமக்கள் பெற்று கொள்ளலாம். இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story