தபால் வாக்குக்கான படிவம் பிரித்து அனுப்பும் பணி தீவிரம்

தபால் வாக்குக்கான படிவம் பிரித்து அனுப்பும் பணி தீவிரம்
திருப்பூர்
தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் தபால் வாக்குக்கான விண்ணப்பம் 80 ஆயிரம் வந்திருந்தது. அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு இந்த விண்ணப்பம் பிரித்து அனுப்பப்பட்டது. தற்போது இந்த விண்ணப்பம் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 362 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்த விண்ணப்பம் பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கான வார்டு பகுதியில் உள்ள 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை கண்டறிந்து, அவர்களது விருப்பத்தின் பேரில் விண்ணப்பம் வழங்கி வருகிறார்கள்.
Related Tags :
Next Story