மகா சிவராத்திரி விழா


மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 7 March 2021 5:34 PM GMT (Updated: 2021-03-07T23:10:06+05:30)

சேரங்கோடு சக்தி-சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் தொடங்குகிறது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரங்கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி-சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள்(புதன்கிழமை) கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி முதல் உச்ச பூஜை, 4.30 மணிக்கு பிரதோஷ பூஜை நடக்கிறது.

இதைத்தொடர்ந்து வருகிற 11-ந் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, மாலை 5.30 மணிக்கு சிங்கோனா முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து சீர் எடுத்து வருதல், 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 

சிவன் கோவிலில் இருந்து புறப்படும் தேரானது சிங்கோனா முத்து மாரியம்மன் கோவில், படச்சேரி, சேரங்கோடு வரை சென்று மீண்டும் சிவன் கோவில் நிலையை வந்தடையும்.

12-ந் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, 10.30 மணிக்கு அன்ன வேல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி, மதியம் 1.30 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Next Story