மாடு மேய்க்க மனைவி மறுப்பு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


மாடு மேய்க்க மனைவி மறுப்பு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 7 March 2021 6:11 PM GMT (Updated: 7 March 2021 6:14 PM GMT)

மாடு மேய்க்க மனைவி மறுத்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

இடிகரை,

பெரியநாயக்கன்பாளையம் அருகே செங்காளிபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். 

இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. தற்போதுதான் குழந்தை பிறந்தது. இவர் கடந்த மாதம் ஒரு மாடு வாங்கினார். அதை தினமும் காலை மற்றும் மாலையில் மேய்த்து வந்தார். 

இதனால் வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் தனது மனைவியிடம் மாட்டை மேய்க் குமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படு கிறது. 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சந்தோஷ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story