ரத்த தான முகாம்


ரத்த தான முகாம்
x

ரத்த தான முகாம்

பனைக்குளம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம், யூத் ரெட் கிராஸ், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தன்னார்வ ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா தலைமை தாங்கினார். செய்யது அம்மாள் கலைக் கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா முகாமை தொடங்கி வைத்து பேசினார். கல்லூரி முதல்வர் அமானுல்லா ஹமீது முன்னிலை வகித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் வள்ளிவிநாயகம் வரவேற்றார். தேவிபட்டினம் வட்டார மருத்துவ அதிகாரி ஆன்டன் சாகாய் மேற்பார்வையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ குழுவினர் மாணவ-மாணவிகளிடம் ரத்தம் சேகரித்தனர். இதில் 50 மாணவ-மாணவிகள் ரத்த தானம் செய்தனர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் சாக்ரட்டிஸ் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். முடிவில் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் ராஜமகேந்திரன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை ஆசிரியர் அய்யப்பன், கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமிது மற்றும் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story