அய்யனார் கோவில்களில் திருட்டு


அய்யனார் கோவில்களில் திருட்டு
x
தினத்தந்தி 8 March 2021 12:06 AM IST (Updated: 8 March 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

அய்யனார் கோவில்களில் திருட்டு

முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே விளாத்தி கூட்டம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆடுகளரி அய்யனார் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக சண்முகநாதன் என்பவர் பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கமாக பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் வெளிப்பகுதியில் இருந்த ஆஞ்சநேயர் சிலை சேதமடைந்து இருந்தது. தொடர்ந்து கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல் பணம், பொங்கல் பானை, குத்துவிளக்கு போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதை கண்ட பூசாரி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். விசாரணையில் ஏனாதியை சேர்ந்த ஜெயராமன்(வயது 24) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டதும், அவர் மனநலம் பாதிக்கபட்டவர் என்பதும் தெரியவந்தது. இவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் திருஉத்தரகோசமங்கை அருகே தெற்கு மல்லல் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார்கோவில் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்து ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு போயிருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருஉத்தரகோசமங்கை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 More update

Next Story