கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை


கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை
x
தினத்தந்தி 7 March 2021 6:45 PM GMT (Updated: 7 March 2021 6:45 PM GMT)

கரூரில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துநடவடிக்கை எடுத்தனர்.

கரூர்
வாகன சோதனை
தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒருபகுதியாக கரூர் தொகுதியில் 6 பறக்கும்படை குழுக்களும், 6 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுக்களும் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தநிலையில் நேற்று அதிகாலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி அமுதா தலைமையிலான அதிகாரிகள் கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், கரூர்- ஈரோடு சாலை, ஆத்தூர் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
பணம் பறிமுதல் 
அப்போது அதிகாலை 3 மணி அளவில் அப்பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரில், உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் ரூ.67 ஆயிரத்து 500 கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, கரூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். 


Next Story