மின்னணு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி


மின்னணு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் செயல் விளக்கம்
x
மின்னணு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் செயல் விளக்கம்
தினத்தந்தி 7 March 2021 6:55 PM GMT (Updated: 2021-03-08T00:25:20+05:30)

ின்னணு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் செயல் விளக்கம் அளித்தனர்

கிணத்துக்கடவு

மின்னணு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் செயல் விளக்கம் அளித்தனர்

செயல் விளக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 தேதி நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக களமிறங்கியுள்ளனர்.  சட்டமன்ற தொகுதி அதிகாரிகள் தேர்தல் பணிகள் தீவிரம் காட்டியுள்ளனர். 

கிணத்துக்கடவு தொகுதியில் கிணத்துக்கடவு வருவாய் கிராமங்களுக்குப் பட்ட பகுதிகளில் மின்னணு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து சொக்கனூர், சிங்கராம்பாளையம், வட புதூர், கிணத்துக்கடவு பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராமராஜ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு மின்னணு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்த செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனர். 
விழிப்புணர்வு
அதேபோல் பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோவில்பாளையம் வருவாய் கிராமங்களில் உள்ள கோவில்பாளையம், தேவனாம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம மக்களுக்கு மின்னணு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

அதேபோல் வடசித்தூர் வருவாய் கிராம பகுதியில் வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் வடசித்தூர், சிறுகளந்தை காட்டம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டு பதிவு செய்வது  குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து வருவாய் துறையினர் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டுப்பதிவு குறித்தும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story