கபிலர்மலை‌ அருகே உடல் நலக்குறைவால் பெண் தற்கொலை மனமுடைந்த கணவரும் விஷம் குடித்தார்


கபிலர்மலை‌ அருகே உடல் நலக்குறைவால் பெண் தற்கொலை மனமுடைந்த கணவரும் விஷம் குடித்தார்
x
தினத்தந்தி 8 March 2021 12:26 AM IST (Updated: 8 March 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

கபிலர்மலை அருகே உடல் நலக்குறைவால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த கணவரும் விஷம் குடித்தார்.

பரமத்திவேலூர்:
கபிலர்மலை அருகே உடல் நலக்குறைவால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த கணவரும் விஷம் குடித்தார்.
பெண் தற்கொலை
பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள சின்னசோளிபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தனலட்சுமி (37). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே தனலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். 
கணவர் விஷம் குடித்தார்
இந்தநிலையில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பாலசுப்ரமணி மனமுடைந்து, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடல் நலக்குறைவால் பெண் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story