முத்துமாரியம்மன் கோவில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்


முத்துமாரியம்மன் கோவில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 7 March 2021 7:02 PM GMT (Updated: 7 March 2021 7:02 PM GMT)

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்

பொன்னமராவதி
பொன்னமராவதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருமயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமை வகித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், தாசில்தார் ஜெயபாரதி, கோவில் செயல் அலுவலர் வைரவன், இன்ஸ்பெக்டர் தனபாலன், வருவாய் ஆய்வாளர் ஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வருகிற 14-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் பங்குனித் திருவிழா தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை திருவிழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் 6-ந் தேதி நடைபெறுவதால் திருவிழா தேதியை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மண்டகப்படிதாரர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யலாம் என பொதுமக்கள் தரப்பில் எடுத்து கூறப்பட்டது. இதனையடுத்து நாளை(செவ்வாய்க்கிழமை) அனைத்து மண்டகப்படிதாரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஆலோசனைக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக செயல்அலுவலர் வைரவன் கூறினார். அதனைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story