மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்


மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 7 March 2021 8:09 PM GMT (Updated: 2021-03-08T01:39:13+05:30)

நெல்லை மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.

நெல்லை, மார்ச்:
நெல்லை மேலப்பாளையம் பகுதி மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்  நேற்று மாலை நடந்தது. மேலப்பாளையத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு, பகுதி தலைவர் மைதீன் பாதுஷா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் டவுன் ஜமால், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அலிப் பிலால், மாவட்ட துணை செயலாளர் காஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து விளக்கிப் பேசினார்கள்.
கூட்டத்தில் வார்டு வாரியாக தேர்தல் பணிக்குழு அமைக்க வேண்டும், பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி வெற்றிக்காக பிரசாரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மைதீன், பாதுஷா, அசன் மைதீன், தமிமுன், பெஸ்ட் ரசூல், முகமது யூசுப் சுல்தான், ரியாஸ் ரகுமான செய்யது அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story