முசிறி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு


முசிறி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 7 March 2021 9:13 PM GMT (Updated: 7 March 2021 9:15 PM GMT)

முசிறி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.

முசிறி,

முசிறி அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த ராசிபுரம் கிராமத்திற்குள் சுமார் 2 வயது புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. அதை நாய்கள் துரத்தியதால் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் மான் தவறி விழுந்தது. இதனைபார்த்த அப்பகுதியினர் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையில் மீட்புபடையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட புள்ளிமான் வனத்துறை மூலம் வனப்பகுதியில் சென்றுவிட்டனர். தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்த புள்ளிமான் கிணற்றுக்குள் விழுந்து மீட்கப்பட்டதை பார்க்க அப்பகுதி மக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story