துடியலூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது


துடியலூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2021 11:02 PM GMT (Updated: 2021-03-08T04:32:48+05:30)

துடியலூர் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

துடியலூர்

கோவை தடாகம் பகுதியில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  பொன்ராஜ் மற்றும் போலீசார் மாங்கரை சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது  அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஆட்டோவில் ஒரு பெட்டியில் மறைத்து வைத்து 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. 

தொடர்ந்து போலீசார் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்ததாக  சோமையனூர் திருவள்ளுவர்நகர் பிருந்தாபன் வீதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 34), ஆனைகட்டி கே.கே.நகரை சேர்ந்த கவுதம் (29) ஆகியோரை கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story